Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

மதுரையில் துளிர் அறிவியல் கட்டுரை தொகுப்பு மலர் வெளியீடு மதுரை காமராசர் பல்கலை. துணைவேந்தர் வெளியிட்டார்

மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இணையத்தில் துளிர் அறிவியல் கட்டுரைத் தொகுப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தினகரன் தலைமை வகித்தார், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன் இணைய வழி மலரை வெளியிட பேராசிரியர்கள் ஷகிலா, ராஜமாணிக்கம், மாநில அறிவியல் இயக்க வெளியீடுகளின் பொறுப்பாளர் அமலராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதில் துணை வேந்தர் கிருஷ்ணன் பேசுகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆராய்ச்சிகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் துளிரில் கட்டுரைகளை வெளியிட்டு மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

டெல்லி விஞ்ஞான் பிரசார், சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகத்தில் இருந்தும், பல்வேறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்தும் இணைய வழியில் இதழ் வெளியிடப்பட்டது. ஆசிரியர் கடசாரி நன்றி கூறினார். காமேஷ் ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x