

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை பகுதியைச் சேர்ந்த மாரி கார்த்திகேயன் என்பவரது மகன் முத்துமணி (19). இவர், அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துமணியை கைது செய்தனர்.