

தூத்துக்குடியில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறுபான்மை அணி சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாநில சிறுபான்மை அணி செயற்குழு உறுப்பினர் ஜே.வி.அசோகன் தலைமை வகித்தார். சிறுபான்மை அணி தலைவர் ஆசிம் பாஷா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 500 பெண்களுக்கு சேலை, 25 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டன.
பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பி.எம். பால்ராஜ், மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜெயம் செல்வராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளர் எஸ்.பி.வாரியர் பங்கேற்றனர்.