சேவியர் கல்லூரி மாணவர் முதலிடம்

சேவியர் கல்லூரி மாணவர் முதலிடம்

Published on

திருநெல்வேலி தனித்தமிழ் இலக்கிய கழகம் சார்பில், பல் கலைக்கழக அளவில் நடத்திய பேச்சுப் போட்டியில் தூய சவேரியார் கல்லூரி மாணவர் த.முத்தரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு வெள்ளி சுழற்கோப்பையும், ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புத்தகமும் பரிசு வழங்கப்பட்டது.இதை பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி வழங்கினார். தனித்தமிழ்இலக்கிய கழக தலைவர் வளன்அரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலிடம் பெற்றமாணவரை கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரியதாஸ், கலைப்புல தலைவர் பேராசிரியர் அலோசியஸ் ஆல்பர்ட், தமிழ்த்துறை தலைவர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் பாராட்டினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in