விழுப்புரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 134 பேர் தேர்வு

விழுப்புரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பெற்றோருடன் பங்கேற்ற இளையோர்.
விழுப்புரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பெற்றோருடன் பங்கேற்ற இளையோர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேற்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன் முகாமைதொடங்கி வைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலு வலர் வேல்முருகன் வரவேற்றார். இம்முகாமில் 21 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் கலந்து கொண்ட 409 இளையோரில் 134 பேர் தேர்வு செய்யப்பட்டு, நியமன ஆணை பெற்றனர்.

மேலும் 31 பேர் முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டாம் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 26 பேர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் திறன் பயிற்சியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் காலாவதி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in