

கரூர், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பொன்.பகலவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னை கடலோர அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய எஸ்.எஸ்.மகேஸ்வரன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்ட மகேஸ்வரனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூரில்...
அரியலூர் மாவட்ட மக்களின் முழு பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வி.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.