

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்.19-ம் தேதி வழக்கறிஞர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டனர். ஆண்டுதோறும் இந்த தினத்தை, கருப்பு தினமாக வழக்கறிஞர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன்படி, பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் அனைவரும் நேற்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, செயலாளர் கிருஷ்ணராஜ், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சங்க நிர்வாகி தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.