நெல்லை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் 40 இடங்களில் திறப்பு

நெல்லை மாவட்டத்தில்  நெல் கொள்முதல் நிலையங்கள் 40 இடங்களில் திறப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை தொடங்கியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்று பயனடையும் பொருட்டு உடனடியாக 29 இடங்களிலும், அடுத்த வாரம் 11 இடங்களிலும் ஆக மொத்தம் 40 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி வட்டத்தில் 5 இடங்களிலும், நாங்குநேரி 4 , அம்பாசமுத்திரம் 9, பாளையங் கோட்டை மற்றும் சேரன்மகாதேவி வட்டத்தில் தலா 10, மானூர் வட்டத்தில் 2 இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது. கொள்முதல் நிலை யம் தொடர்பான புகார்களுக்கு 73056 11085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in