

பிஎஸ்என்எல் ஊழியர்கள் வண்ணார்பேட்டையிலுள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த ஆண்ட பெருமாள் தலைமை வகித்தார்.
`பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய கூடாது. அவர்களுக்கான ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. மாநில அமைப்பு செயலாளர் சீதாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர்கள் நடராஜன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.