ஆரணியில் வரும் 22-ம் தேதி முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரனின் இல்ல திருமண விழா
தமிழக முதல்வர், துணை முதல்வர் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனின் இளைய மகன் திருமண விழா திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் - மணிமேகலை தம்பதியின் இளைய மகன் ஆர்.விஜயகுமாருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த அரசு மருந்தாளுனர் எம்.கே.கிரிராஜன் – உமாமகேஸ்வரி தம்பதியின் மகள் மருத்துவர் ஜி.மீனதர்ஷினிக்கும் ஆரணி அடுத்த சேவூர் புறவழிச் சாலையில் உள்ள எஸ்கேவி திருமண மண்டபத்தில் வரும் 22-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகி யோர் தலைமை வகிக்கின்றனர். திருமண விழாவுக்கு வருகை தருபவர்களை அமைச்சரின் மூத்த மகன் ஆர்.சந்தோஷ்குமார் - எஸ்.ஸ்வர்ணாம்பிகா தம்பதி மற்றும் பேரன் அத்திவரதர் ஆகியோர் வரவேற்கின்றனர்.
திருமண விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண் டர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
