திருப்பத்தூரில் இன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூரில் இன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

Published on

திருப்பத்தூரில் விவசாயிகளுக்கான குறை தீர்வுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் நலன் கருதி 5 வட்டாரங்களில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு கரோனா ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளித்துள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் இம்மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் இன்று காலை 10.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண், பால்வளம், கூட்டுறவு,ஊரக வளர்ச்சி, வருவாய், காவல், பொதுப்பணி, தோட்டக்கலை, மின்சாரவாரியம், சமூக நலம், வனம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வுள்ளனர். எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது விவசாய தொழில் தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்து தீர்வு காணலாம்’’ என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in