Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

9,580 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை மாவட்டம் கவுண்டம் பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 9,580 பயனாளிகளுக்கு ரூ.36 கோடி மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி பேசும்போது, “சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2,349 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1.22 கோடி, வருவாய் துறையின் மூலம் 1,722 பயனாளிகளுக்கு ரூ.11.80 கோடி மதிப்பில் வீட்டு மனைப்பட்டாக்கள், 2,407 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், சமூக நலத் துறையின் மூலம் 996 பயனாளிகளுக்கு ரூ.7.96 கோடி மதிப்பில் தாலிக்கு தங்கம், ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 27 பயனாளிகளுக்கு ரூ.16.95 லட்சம் உதவித்தொகை உட்பட மொத்தம் 9,580 பயனாளிகளுக்கு ரூ.36.01 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார். அதைத்தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல், ரூ.23.23 லட்சம் மதிப்பில் எண்.24வீரபாண்டியில் பழங்குடியினர் நல உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்கள், ரூ.32.30 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம், குடிநீர் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை அமைச்சர் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, எம்எல்ஏக்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுகுட்டி, ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x