சின்னசேலம் அருகே சாராய விற்பனையை கண்டித்து மறியல்

சின்னசேலம் அருகே சாராய விற்பனையை கண்டித்து மறியல்
Updated on
1 min read

சின்னசேலம் அருகே கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து கிராம மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

கல்வராயன் மலைப் பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மலையடிவாரத்தையொட்டிய கல்லாநத்தம் கிராமப் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராயத்தை அருந்துவோர் அப்பகுதி இளைஞர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் கிராமத்தில் அமைதி சீர்குலை வதாக அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனையால் தகராறு எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கல்லூத்தூர்-ஊனத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து சின்னசேலம் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனஉறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in