

கடலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பாண்டியன், முருகுமாறன் ஆகியோர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 73 பேருக்கும் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 392,புவனகிரி பகுதியைச் சேர்ந்த 186, ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த 17 பேர் உட்பட மொத்தம் 668 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினர்.