Regional01
வருவாய்த்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்த தால் பணிகள் பாதிக்கப்பட்டன.
`காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இpபோராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
திருநெல்வேலி, சேரன்மகாதேவி கோட்டாட்சியர் அலுவலகங்களில் குறைந்த அளவுக்கு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
