காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் இன்று  தொடக்கம்
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று (பிப்.17-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 23-ம் தேதியும், வெள்ளி ரதம் பிப்ரவரி 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. பிப்ரவரி 28-ம் தேதி மாலை விஸ்வரூப தரிசனத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

உதவி ஆணையர் என்.தியாகராஜன், கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி, நிர்வாக அலுவலர் எஸ்.நாராயணன் ஆகியோர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in