Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

அம்மா மினி கிளினிக் திறப்பு

பெரம்பலூர் அருகே புதுநடுவலூ ரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சித் தலை வர் ஜெயந்தி தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும செயலாளர் நீல்ராஜ் முன்னிலை வகித்தார். குன்னம் எம்எல்ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பெரம்பலூர் எம்எல்ஏ ஆர்.தமிழ்ச்செல்வன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதாராணி, ஒன்றிய கவுன்சிலர் அருணா பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் செந்தில்வேலன், தனலட்சுமி சீனிவாசன் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட மலேரியா அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x