Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

மு.க.ஸ்டாலினிடம் மருத்துவப் படிப்பு, மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட மாணவி, சிறுமிக்கு நிதியுதவி வழங்கிய திமுக எம்எல்ஏக்கள்

கும்பகோணம்/ புதுக்கோட்டை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிப்.14-ம் தேதி நடைபெற்ற, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கும்ப கோணத்தைச் சேர்ந்த காளசந்தி கட்டளை தெருவில் வசிக்கும் கும்பகோணம் நேரு–அண்ணா காய்கறி மார்க்கெட்டில் பணி புரியும் வி.ஜெகன்நாதன், தனது 2-வது மகள் உதயாவின் பல் மருத்துவப் படிப்பைத் தொடர, கல்விக் கட்டணம் செலுத்தி உதவிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தார்.

இந்த கோரிக்கையை ஜெகன் நாதன் கூறிய சில நிமிடங்களில், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மாணவியின் பல் மருத்துவ கல்வி கற்பதற்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூட்ட அரங்கிலேயே தெரிவித்தார்.

இதையடுத்து, எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நேற்று தனது சொந்த நிதியிலிருந்து பல் மருத்துவம் பயிலும் மாணவி உதயாவின் முதலாமாண்டு கல்விக் கட்டணம் ரூ.3.50 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தை ஜெகன்நாதனிடம் வழங்கினார்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சு.கல்யாண சுந்தரம், கும்பகோணம் நகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஒன்றிய பொறுப் பாளர்கள் டி.கணேசன், இரா.அசோக்குமார், ஆர்.கே.பாஸ்கர் உள்ளிட்ட திமுகவினர் உடனி ருந்தனர்.

சிறுமிக்கு உதவி...

புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளம் அருகே மாங்கனாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது 3 வயது மகளுக்கு பிறவி யிலேயே பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண் இமைகளை மூட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களது மகளின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்யக் கோரி, திருமயம் அருகே ஊனையூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் பிரச்சார கூட் டத்தில் பங்கேற்ற திமுக தலை வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுமியின் பெற்றோர் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, மறுநாளான நேற்று சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோரிடம் ரூ.2 லட்சத்தை எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். அப்போது, சிறுமியின் பெற்றோரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். திமுக ஒன்றியச் செயலாளர் தங்க மணி, ஊராட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x