பிப்.19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பிப்.19-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published on

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 19-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் .

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in