

கொடி நாள் நிதியில் இலக்கை விட அதிகம் வசூலித்ததற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழிக்கு தமிழக ஆளுநரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக 2017-18-ம் ஆண்டு கொடிநாள் நிதி இலக்கை விட அதிகமாக சேகரித்த அப் போதைய தருமபுரி மாவட்ட ஆட்சியரும், தற்போதைய கரூர் மாவட்ட ஆட்சிய ருமான சு.மலர் விழிக்கு ஆளுநரின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பாராட்டுச்சான்றிதழை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியிடம் திருச்சி முன் னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.ஞானசேகர் நேற்று வழங்கினார்.