

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தனியார் சொகுசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது.
ஈரோடு நசியனூர்அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காஞ்சிக்கோயிலைச் சேர்ந்த ஜெகநாதன் (45) என்பவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து சாலை யோரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த ஐந்து பயணிகள் காயமடைந்தனர்.