விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 4 மினி கிளினிக் அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்து வைத்தார்

மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி கிராமத்தில்  கர்ப்பிணி பெண்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகத் தினை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத் தினை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் கூடு தலாக 4 மினி கிளினிக்குள் நேற்று திறக்கப்பட்டன.

மயிலம் அருகே வைரபுரம், விழுக்கம், மேல்மலையனூர் அருகே கப்ளாம்பாடி, காரணைகிராமங்களில் மினி கிளினிக்கு களை நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகத்தினையும் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தை நல பரிசு பெட்டகத்தினையும் வழங் கினார்.

இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் உளுந்தூர்பேட்டை குமரகுரு, செஞ்சி மஸ்தான், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார், முன்னாள் எம்பி செஞ்சி சேவல் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in