

ராமநாதபுரம் அருகே வேன் மோதி மாணவர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பெரிய பட்டினத்தைச் சேர்ந்த செய்யது ஜமாலுதீன் மகன் சுகைபு(16). அதே ஊரில் வசிக்கும் சகுபர் மகன் காமில்(16). இருவரும் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.
நேற்று மாலை பள்ளி முடிந்து இருவரும் முத்துப்பேட்டை யிலிருந்து ரெகுநாதபுரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென் றனர்.
அரசூர் அருகே எதிரே வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சுகைபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த காமில் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.