

கல்வி நிலையங்களே புதிய சிந்தனையின் ஊற்றுக்கண் என்று, திருநெல்வேலி ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
பாளையங்கோட்டை சதக்கத் துல்லா அப்பா கல்லூரியில் முது நிலை மற்றும் வணிகவியல் ஆராய்ச்சித்துறையின் “சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் புதிய திவால் சட்டம் 2016-ன் தாக்கம்” (Impact of Insolvency and Bankruptcy Code-2016 on MSME) என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.
கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இரண்டாம் உலகப் போரு க்குப் பின் கரோனாவால் உலகம் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளா கியிருக்கிறது. பெட்டிக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றன. மேற்கத்திய நாடுகளான ஜொ்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் இன்னும் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை. சவால்களை ஆற்ற லோடு எதிர்கொள்ளும் இளைய தொழில்முனைவோரை இந்த உலகம் இன்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக முனைவா் பட்ட மாணவா்களே, உலகெங்கும் புகழ்பெற்றிருக்கக் கூடிய கூகுளை உருவாக்கியவா்கள். புதிய சிந்தனைகள் தோன்றுமிடம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளாக இருக்கப் போகின்றன. எனவே இளை யோரை ஊக்கப்படுத்துங்கள் என்று தெரிவித்தார்.
இணைப் பேராசிரியரும் வணிகவியல் ஆராய்ச்சி துறையின் தலைவருமான ஆ.ஹாமில் வரவேற்றார். முதல்வர் மு. முகம்மது சாதிக் தலைமை வகித்தார்.