

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், சாயக்கழிவு நீர் பிரச்சினைக்கு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்காததைக் கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.