மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை பெற நாளை சிறப்பு முகாம் ஆட்சியர் சிவன் அருள் தகவல்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை பெற நாளை சிறப்பு முகாம் ஆட்சியர் சிவன் அருள் தகவல்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாம் 13-ம் தேதி (நாளை) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "திருப் பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பெறவில்லை என்றால், அவர் களுக்காக மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் 13-ம் தேதி நாளை அனைத்து வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

எனவே, இதுவரை புதிய மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்று, தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது, வீட்டு வாடகைக்கான ஒப்பந்த பத்திரம்) ஆகிய ஆவணங்களுடன் புகைப்படம் மற்றும் கைபேசி எண்ணுடன் சேர்த்து 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப் பிக்கலாம்’’என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in