

சேலத்தில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்த முதியவரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் வீட்டில் சிறிய அளவில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் மாலை டிபன் வாங்க வந்த 10 வயது சிறுமியை கோவிந்தராஜ் வீட்டுக்குள் அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
மகளிர் போலீஸார் விசாரித்து கோவிந்தராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.