என்எல்சி நிறுவனம் ரூ. 45 லட்சத்தில் காவல்துறைக்கு மின்னணு கருவிகள் வழங்கியது

என்எல்சி  நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ராகேஷ் குமார் கடலூர் மாவட்ட காவல் துறை அலுவலர் ஒருவருக்கு மின்னணு கருவியை வழங்கினார். அருகில் நிறுவன மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், எஸ்பி அபிநவ்.
என்எல்சி நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ராகேஷ் குமார் கடலூர் மாவட்ட காவல் துறை அலுவலர் ஒருவருக்கு மின்னணு கருவியை வழங்கினார். அருகில் நிறுவன மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், எஸ்பி அபிநவ்.
Updated on
1 min read

என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு இருசக் கர வாகனங்கள் உட்பட ரூ. 45 லட்சம் மதிப்பிலான கருவிகளை வழங்கியது.

கடலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு என்எல்சி நிறுவனம் சார்பில் 15 இருசக்கர வாகனங்கள்,உடையில் பொருத்தப்படும் 30 கேமராக்கள், வயர்லெஸ் கருவிகள், வாகன முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் ஒளிரக்கூடிய ஜாக்கெட்டுகள், மின்னணு கருவிகள், பிரத்தியேக தலைக்கவசங்கள் மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான உபகர ணங்கள் நெய்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

மேலும் என்எல்சி நிறுவன கணிப்பொறித் துறையால் வடி வமைக்கப்பட்ட "கனெக்ட்" என்ற கைப்பேசி செயலியை என்எல்சி நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராகேஷ் குமார் தொடங்கி வைத்தார். கடலூர் எஸ்பி அபிநவ், என்எல்சி நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குநர் விக்ரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த செயலியை கைப்பேசி மூலம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் 2,800 காவலர்களும் தங்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க முடியும். மேலும் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.அவர்களது பணிகளை எளிதாக்கும் வகையில் பல்வேறு வசதிகளும் இச்செயலியில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் காவல் துறை ஊழியர்கள் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான வகையில் பணிபுரிவதற்கு இச்செயலி வழி ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in