

விழுப்புரம் அருகே நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின.
விழுப்புரம் அருகே தும்பூர் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாவப்பன். விவசாயி. இவரது வீட்டில் நேற்று காலை மின்கசிவால் மேற்கூரையில் தீப்பிடித்தது. தீ காற்றில் வேகமாக பரவி, பக்கத்திலுள்ள குமார், சங்கர், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், மாரியப்பன், எல்லப்பன், விஜி, சேட்டு, பிரகாஷ் ஆகியோரது வீட்டுமேற்கூரைகளும் எரிந்தன. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயைஅணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. இத்தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர்ராபின்காஸ்ட்ரோ தலைமையிலான மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ரூ.15 லட்சத்திற்கு சேதம்