

முதல்வர் பழனிசாமி இன்று (10-ம் தேதி) சேலம் வருகிறார். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி இன்று காலை வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மாலை அங்கிருந்து கார் மூலம் சேலம் வருகிறார். சேலம் வரும் முதல்வருக்கு மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ வெங்கடாஜலம் தலைமையில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து ஓமலூர் அதிமுக அலுவலகம் வரும் முதல்வர் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுக்கிறார். நாளை (11-ம் தேதி) காலை சேலத்தில் இருந்து திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் செல்கிறார். இதையொட்டி, சேலம் மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார், எஸ்பி தீபாகாணிகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.