பிளாஸ்டிக் சாக்கு உற்பத்தியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

பிளாஸ்டிக் சாக்கு உற்பத்தியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Published on

நெகிழி சாக்கு பயன்பாட்டை தவிர்த்து சணல் சாக்கு பைகளை பயன்படுத்தக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஜனநாயக மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கழக நிறுவனத் தலைவர் ஏ.சி. கண்ணன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், நெகிழி சாக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்.

சணல் சாக்கு உற்பத்தி யாளர்கள், வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சாக்குப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in