சசிகலாவை வரவேற்று தனது பெயரில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை பெரம்பலூர் போலீஸில் அதிமுக நிர்வாகி புகார்

சசிகலாவை வரவேற்று தனது பெயரில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை பெரம்பலூர் போலீஸில் அதிமுக நிர்வாகி புகார்
Updated on
1 min read

சிறையிலிருந்து விடுதலையாகி உள்ள சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டும் அதிமுக நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சசிகலாவை வர வேற்று பெரம்பலூரில் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்றச் செய லாளர் ராஜாராம் பெயரில் படத்து டன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள் ளன.

ஆனால், அந்தப் போஸ்டருக் கும், தனக்கும் சம்பந்தமில்லை எனவும், தனது பெயரில் போஸ்டர் அச்சடித்து ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எஸ்.பி அலுவலகத்தில் ராஜாராம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “அதிமுகவில் பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர் பொறுப்பில் கடந்த 15 ஆண் டுகளுக்கு மேலாக உள்ளேன். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் எனது பெயரில் தவறான போஸ்டரை சிலர் ஒட்டியுள்ளனர். அந்தப் போஸ் டரை ஒட்டியவர்கள், ஒட்டத் தூண்டியவர்கள், அச்சடித்தவர் கள் ஆகியோர் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in