விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு

தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி ஆதிபராசக்திக்கு  இளநீர் அபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி ஆதிபராசக்திக்கு இளநீர் அபிஷேகம் நடந்தது.
Updated on
1 min read

தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் தைப்பூச விழா குருபூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. சக்தி கொடியை உதவி செயற்பொறியாளர் பிரசாத் ஏற்றி வைத்தார். மக்கள் வளமுடன் வாழவும், இயற்கைச் சீற்றம் தணியவும், தொழில்வளம் சிறக்கவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. சதுரம், முக்கோணம், அறுங்கோணம் ஆகிய வடிவங்களில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு 9 கலசங்கள், 9 ஓம்சக்தி விளக்குகள் வைக்கப்பட்ட‌ வேள்வி பூஜையை சக்திபீட தலைவர் முருகேசன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

விவசாயம் செழிக்க வேண்டி தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் பக்தவச்சலம் கருவறையில் உள்ள அன்னை ஆதிபராசக்திக்கு இளநீர் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார். பக்தர்களுக்கு அருட் பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தொடங்கி வைத்தார். அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களால் பூச்சொரிதல் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in