Published : 07 Feb 2021 03:13 am

Updated : 07 Feb 2021 03:13 am

 

Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

கோவையில் ரூ.12.93 கோடியில் சாலைப் பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்

கோவை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 32, 37-வது வார்டுக்கு உட்பட்ட அவிநாசி சாலை முதல் எஸ் பெண்ட் வரை, விளாங்குறிச்சி சாலை, கொடிசியா சாலை, சேரன் மாநகர் பிரதான சாலை, மலர் அவென்யூ, சக்தி நகர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.12.93 கோடி மதிப்பில் சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இப்பணிகளைத் தொடங்கிவைத்ததுடன், விளாங்குறிச்சியில் ரூ.1.31 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற சுகாதார நிலையம், சரவணம்பட்டியில் ரூ.78.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மதுராந்தகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


திமுகவினர் போராட்டம்

சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திட்டப் பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், சிங்காநல்லூர் எம்எல்ஏ நா.கார்த்திக்குக்கு மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, திட்டப்பணியைத் தொடங்கிவைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வரும்போது, விளாங்குறிச்சிப் பகுதியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்தனர்.



Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x