

என்எல்சி நடத்திய பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று கடலூர்கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் 259 காலியி டங்களை நிரப்ப எழுத்து தேர்வுநடைபெற்றது. அடுத்த கட்ட நேர்முகத் தேர்விற்கு தேர்ந்தெடுத்தோர் பட்டியலில் 1,582 நபர்கள் இடம் பெற்றனர். இதில் 10 நபர்கள் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இடம் பெறவில்லை. வெளி மாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய நபர்களில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 1 சதவீத நபர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என என்எல்சி நிர்வாகம் அறிவித் துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் நடைபெற்ற தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுகிறது. என்எல்சிக்காக வீடு, நிலம் கொடுத்வர்களுக்கோ, அப்ரண்டிஸ் முடித்து நிரந்தர பணிக்காக காத்திருப்பவர்களுக்கோ, இந்த நிறுவனத்திற்காக கடந்த50 ஆண்டுகளாக உழைத்தவர்களின் வாரிசுகளுக்கோஇது வரை எந்த வாய்ப்பும்கொடுக்கப்படவில்லை. என்எல்சி நிர்வாகம் இந்தஎழுத்து தேர்வு முடிவைரத்து செய்ய வேண்டும். தமிழகத்திலேயே தேர்வு மையங்களை வைத்து, தேர்வைநியாயமாகவும், முறையாகவும் நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கி றேன். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமையும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடும் அளிக்கவேண்டும். இதற்கு என்எல்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.