

தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுச் செயலாளர் ஜே.ராஜ் செல்வின் அறிக்கை: சென்னையில் உள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் , தூத்துக்குடியில் குறு, சிறு தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து ஏற்றுமதி இறக்குமதி குறித்த 4 நாள் பயிற்சியை நடத்தவுள்ளது.
ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி- இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்ற விவரங்கள் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
பயிற்சியில் 18 வயது நிரம்பிய குறைந்தது 10-ம் வகுப்பு முடித்த ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம்.
பயிற்சி கட்டணம் ரூ.4,600. பதிவு செய்ய 6.2.2021 கடைசி. பயிற்சி நிறைவில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வழங்கும் சான்றிதழ் அளிக்கப்படும். மேலும் விவரங்கள் அறிய 9791423277, 9843878690 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.