தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் உள்ள தனியார் மீன் கம்பெனி குடோனில் தருவைகுளம் கடலோர பாது காப்பு குழும போலீஸார் நேற்று முன்தினம் இரவில் சோதனை நடத்தினர். அப்போது 20 கேன்களில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 300 கிலோ எடையுள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.