

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைக்கு ‘ஆதினி’ என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெயர் சூட்டினார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 30-ம் தேதி பெண் குழந்தையை வளர்க்க முடியாமல், தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க குடும்பத்தினர் விரும்பினர். பின்னர், சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் உடனடியாக குழந்தை சேர்க்கப்பட்டது. இந்தக் குழந்தையை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் காண்பித்தனர். அப்போது, அந்த பெண் குழந்தைக்கு ‘ஆதினி’ என்ற பெயரை மாவட்ட ஆட்சியர் சூட்டி, குழந்தை நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார்.