

தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.குமாரசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, மின்சார ஊழியர் ஓய்வூதியர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் ராஜாமணி, அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் பேசினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தூத்துக்குடி
தென்காசி