திருவண்ணாமலை, வேலூரில் மறியலில் ஈடுபட்ட 248 அரசு ஊழியர்கள் கைது

திருவண்ணாமலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள். அடுத்த படம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர். .
திருவண்ணாமலையில் நேற்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள். அடுத்த படம்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர். .
Updated on
1 min read

திருவண்ணாமலை மற்றும் வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திமறியலில் ஈடுபட்ட 248 அரசு ஊழியர் கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தற்காலிக பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும். கரோனா பணியில் ஈடு பட்டுள்ள அனைத்துத் துறை ஊழியர் களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு நேற்று நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பார்த்திபன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பாரி தொடங்கி வைத்துப் பேசினார். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 213 அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர்

இதில், பங்கேற்றவர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட 35 அரசு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in