

சேலம்-சென்னை இடையே 277 கிமீ தூரம் ரூ.10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீட்டில் எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். புதிய அறிவிப்பாணை வழங்கி சுற்றுப்புற சூழல் அனுமதியுடன் எட்டு வழிச் சாலை அமைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நேற்று மத்திய பட்ஜெட்டில் இத்திட்ட பணிகள் தொடங்க ஒப்பந்தம் வரும் நிதியாண்டில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் அடுத்த ராமலிங்கபுரம் பகுதியில் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயி குப்புசாமி என்பவரின் நிலத்தில் விவசாயிகள் திரண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.