விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலையில் உறவினர் கைது

விழுப்புரத்தில் பாமக பிரமுகர் கொலையில் உறவினர் கைது
Updated on
1 min read

விழுப்புரத்தில் நகர பாமக துணைச் செயலாளர் கொலையில் அவரது உறவினரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

விழுப்புரம் முத்தோப்பு கைலாசநாதர் வீதியைச் சேர்ந்தவர் நகர பாமக துணைச் செயலாளர் ரவி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தனிப்படை அமைக்கப்பட்டு விழுப்புரம் நகர போலீஸார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த ரவியின் அண்ணன் மகன் ஜெயகணேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடந்த 2006-ம் ஆண்டு வீட்டுமனை பிரச்சினை, கோயில் விழா தொடர்பாக ரவி தரப்பினர் ஜெயகணேஷை தாக்கியதாக வழக்கு நடைபெற்று வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்திருந்த ஜெயகணேஷ், ரவியை கொலை செய்தது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in