

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களையும் பென்ஷன் திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து சங்க கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைமுன் நடைபெற்ற போராட்டத் துக்கு தொமுச அமைப்புச் செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் பெருமாள், எச்எம்எஸ் பேரவை தலைவர் சுப்பிரமணியன், டிடிஎஸ்எப் பேரவை துணைத் தலைவர் சந்தானம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதுபோல் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனைமுன் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச பணிமனை செயலாளர் முத்துகுமாரசாமி, தலைமை வகித்தார். பாளையங்கோட்டை கேடிசி நகர் பணிமனைமுன் நடைபெற்ற போராட்டத்துக்கு எல்பிஎப் செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். எம்எல்ஏ டிபிஎம் மைதீன்கான் பேசினார்.
தென்காசி
கோவில்பட்டி
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதத்துக்கு தொமுச செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்