

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்ட பயனாளிகள் நேர்முகத்தேர்வு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நேற்று நடைபெற்றது. முட நீக்கியல் மருத்துவர் வெங்கடேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.குமார், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு பிரதிநிதி ஏ.கருணாகரன் ஆகியோர் அடங்கிய பயனாளிகள் தேர்வு குழுவினர் பங்கேற்றனர். இம்முகாம்களில் 44 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
மேலும், தேர்வுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.