

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற் குட்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.
‘அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே தங்களுக்கும் வசூலிக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போல் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது’ என்று கூறி, இந்த மருத்துவக் கல்லூரி மாண வர்கள் அறவழி முறையில் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித் துள்ளது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள போராட்ட களத்திலேயே உணவு உண்டு, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர் உணவு என அனைத்தையும் தடை செய்துள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், கடந்த 25-ம் தேதிசிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மாணவர் கள், “பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே எங்களிடமும் வசூலிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் தொடரும்” என்று கூறினர்.
நேற்றுடன் 51 வது நாளாக இவர்களின் போராட்டம் தொடர்கிறது.
நேற்றைய போராட்டத்தில் தமிழக முதல்வர், துணைமுதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மனுவைஅனுப்பி, கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.