மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற பெரம்பலூர் மாணவிகள்

மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 9 பதக்கங்களை வென்ற பெரம்பலூர் மாணவிகள்
Updated on
1 min read

சிவகாசியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

34-வது மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுக ளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் சிவகாசியில் அண்மை யில் நடைபெற்றன.

இதில், பெரம்பலூர் விளை யாட்டு விடுதியைச் சேர்ந்த 10 மாணவிகள், தடகளப் பயிற்றுநர் கோகிலா தலைமையில் கலந்துகொண்டனர்.

16 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவி தன்யா 1.45 மீட்டர் உயரம் தாண்டியும், 18 வயதுக் குட்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மாணவி பிரியதர்ஷிணி 37.10மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தும், 5 கி.மீ தொலைவு நடைபோட்டியில் மாணவி சுபாஷினி 32.56 நிமிடத்தில் நடந்து வந்தும், 20 வயதுக் குட்பட்டோருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் மாணவி பவானி முதலிடத்தைப் பிடித்தும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

மாணவி கிருத்திகா 20 வயதுக் குட்பட்டோருக்கான 1,500 மீ ஓட்டபோட்டியில் வெள்ளிப் பதக்க மும், 800 மீ ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். மாணவி சங்கீதா 20 வயதுக் குட்பட்டோருக்கான மும்முறைத் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெண.கலப் பதக்கமும், மாணவி கார்குழலி சங்கிலிகுண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 9 பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவிகள், தடகள பயிற்றுநர் கோகிலா ஆகியோரை ஆட்சியர்  வெங்கட பிரியா நேற்று பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, மாவட்ட அரசு விளையாட்டு விடுதி மேலா ளர் ஜெயக்குமாரி உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in