

திருநெல்வேலி மாவட்டம் கூடுதாழை நடுத்தெருவை சேர்ந்த மீனவர் ஆல்ட்ரின் (47). இவரது சித்தப்பா மகனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆல்ட்ரின் இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பலஇடங்களில் தேடினர். இந்நிலையில் திசையன்விளை- இடைச்சிவிளை செல்லும் சாலையோரத்தில் ஆல்ட்ரின் சடலம் கிடப்பதாக திசையன் விளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அவரது தலை மற்றும் நெற்றியில் பலத்த காயங்கள் இருந்தன. போலீஸார் சடலத்தை கைப்பற்றினர். ஆல்ட்ரின் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.