சிதம்பரத்தில் அரசு சார்பில் சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழா

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Updated on
1 min read

சிதம்பரத்தில் அரசு சார்பில் சுவாமி சகஜானந்தா பிறந்த நாள் விழா நடைபெற்றது.

தீண்டாமையை எதிர்த்துப் போராடி, சமூக மாற்றத்தை மலரச்செய்த சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை இந்தாண்டு முதல் அரசு விழாவாக கொண்டாட முதல்வர் பழனிசாமி உத்தர விட்டார். அதன்படி நேற்று அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மணி மண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடங்கள்) பாபு, சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், சுவாமி சகஜானந்தா பேரவை அமைப்பினர்,பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in