Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

கரோனா ஊரடங்கால் எளிமையாகக் கொண்டாட்டம் குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்த ஆட்சியர்கள் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு முதல்வர் பதக்கம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆட்சியர் அன்பழகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து சிறப்பாகப் பணிபுரிந்த போலீஸார் 149 பேருக்குப் பதக்கங்களை வழங்கினார். சிறந்த பணிக்காகப் பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த 263 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 96 பேருக்கு ரூ. 21,20,695 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

கரோனா தொற்றைத் தவிர்க்க தியாகிகளின் வீடுகளுக்கே சென்று கவுரவிக்க தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, மதுரை பிராட்வே தெருவில் வசிக்கும் தியாகி பாலு, சகாயம் நகர் பழ. சுப்ரமணியன், பேரையூர் டி. கிருஷ்ணாபுரம் அழகப் பெருமாள், பேரையூர் தொட்டியப்பட்டி நாகப் பன், உசிலம்பட்டி அருகே வலையப்பட்டி முத்துமணி, கருகாட்டான்பட்டி பரமசிவம், மேலூர் கட்சிராயன்பட்டி கட்டசாமி ஆகியோரது வீடுகளுக்குச் சென்று, பொன்னாடைகள் அணிவித்து கவுரப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி முருகன், காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, டிஐஜி ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரோனாவால் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் ஆணையர் விசாகன் தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவர்கள், செவி லியர்கள் உள்ளிட்ட 80 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை ஆணை யர் வழங்கினார்.

கரோனா தடுப்பில் சிறப்பாகப் பணிபுரிந்த தன்னார்வலர்கள் 15 பேருக்கும், கபசுரக் குடிநீர் வழங்கிய தன்னார்வலர்கள் கீதா, எட்வின் ஜாய் ஆகியோருக்கும் சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நகர் பொறியாளர் அரசு, துணை ஆணையர் ராஜேந் திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட விளை யாட்டு அரங்கில் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அணிவகுப்பு மரி யாதையை ஏற்றார். சிறப்பாகப் பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 146 பேருக்குச் சான்றிதழ்களை வழங்கினார். காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 71 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கவுரவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் உடனிருந்தனர்.

விழாவில் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 57 போலீ ஸாருக்கு முதல்வர் பதக்கங்கள், 20 போலீஸாருக்கும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 123 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவகாமி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகள் குடும்பத்தினருக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த 126 போலீஸாருக்கு பதக்கம் வழங்கினார். வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 354 பணியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன், மாவட்ட வருவாய் அலுவலா் லதா, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் காலை 8.15 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உடன் இருந்தார். அதைத் தொடர்ந்து தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக முதல்வரின் விருது 122 பேருக்கும், 52 பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களையும், தீயணைப்புத் துறையில் சிறப் பாகப் பணியாற்றிய 18 பேருக்கும் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தேனி

தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட வருவாய் அலு வலர் க.ரமேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். 69 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்களையும், காவல் துறை யில் சிறப்பாகப் பணி யாற்றிய 7 காவலர்களுக்குப் பாராட்டுச் சான் றிதழ்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x