குடியரசு தினத்திற்கு விடுமுறை அளிக்காத 159 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

குடியரசு தினத்திற்கு விடுமுறை அளிக்காத 159 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா, பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் 170 கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 55 கடைகள், 43 உணவு நிறுவனங்கள், 14 மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என 112 நிறுவனங்களில் விதிமுறைகளின்படி, குடியரசு தினத்திற்கு விடுமுறை அளிக்காதது தெரியவந்தது. இந்த கடைகள், நிறுவனங்கள் மீது வழக்குத் தொடரப்படும் என தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in